சிலோன் ஒக்சிஜன் நிறுவனம் இலங்கை மயக்க மருந்தியல் கல்வியகத்துடன் இணைந்து அண்மையில் கொழும்பில் நடைபெற்ற அதன் வருடாந்த கல்வி காங்கிரஸ் நிகழ்வில் உத்தியோகபூர்வ மருத்துவ வாயு மற்றும் சுவாச சிகிச்சை வழங்குநராக கைகோர்த்திருந்தது.
இதன் போது ENTONOX மற்றும் CONOXIA உள்ளடங்கிய முன்னைய மற்றும் பிந்தைய காங்கிரஸ் செயலமர்வுகள் மற்றும் பிரதான அமர்வுகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வாயுக்களும் சிலோன் ஒக்சிஜன் மூலம் வழங்கப்பட்டிருந்தது.
சிலோன் ஒக்சிஜன் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் CONOXIA இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கல்வியகத்தின் தலைவரான மருத்துவர்.கனிஷ்க இந்த்ரரத்ன உயர்தரம் வாய்ந்த மருத்துவ வாயுக்களை வழங்குவதற்காக மற்றுமொரு ஆண்டு தம்மோடு பங்காளாராக இணைந்த சிலோன் ஒக்சிஜன் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
‘தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளின் தரம் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஊடாக நோயாளிகளை பாதுகாத்தல் எனும் சிலோன் ஒக்சிஜன் நிறுவனத்தின் கண்ணோட்டமானது எமது செயலமர்வுகளின் குறிக்கோளுடன் பொருந்துகிறது.
நாட்டில் 80 வருடகாலமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சிலோன் ஒக்சிஜன், மருத்துவ வாயுக்களுக்கான நம்பகமான பங்காளராக உள்ளதுடன், இந்த வருடாந்த அமர்வுக்காக 3 ஆவது தடவையாக இந்நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது’ என மேலும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM