போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து  திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.