(எம்.மனோசித்ரா)

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். 

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டாரவிடம் வினவிய போது,

கடந்த வருடம் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து 16 நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இதுவரையில் அரசாங்கம் தீர்வு வழங்க வில்லை என தெரிவித்தார்இ

இதையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.