திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு ஊடாக கன்னியாவுக்கு செல்லும் பஸ்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தற்போது சென்று கொண்டிருக்கும் வழியில் புல்மோட்டை பகுதியில் புல்மோட்டை முல்லைத்தீவு வீதியிலும் மற்றும் புல்மோட்டை திருகோணமலை வீதியிலும்  3 இடங்களில் போராட்டத்திற்கு செல்லும் பஸ்கள் மட்டும் தனியாக அடையாளப்படுத்தப்பட்டு பஸ்களில் செல்பவர்கள் கடுமையான உடல் உடமை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவதோடு போராட்டத்திற்கு செல்பவர்களையும் பஸ்களையும் இராணுவம் மற்றும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் பருத்தித்துறையிலிருந்து புல்மோட்டை ஊடாக கன்னியா போராட்டத்திற்கு சென்ற பஸ்ஸை வழிமறித்து படையினர் மற்றும் போலீசார் பரிசோதனைகளை செய்தபின் பஸ்ஸின் முன் சில்லுக்கு காற்று போகும் விதமாக இரகசியமாக  கூரிய ஆயுதத்தால் குற்றி காற்றுபோக செய்து பயணத்தை தடை செய்யும் விதமாக நடந்தது கொள்கின்றார்கள்.

 இதனால் போராட்டத்துக்கு செல்பவர்கள் வழியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு அச்சமடைந்துள்ள நிலைமையும் காணப்படுகின்றது.