மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இதுவர‍ை 3,354 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட  சோதனை  நடவடிக்கைகளுக்கு  அமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.