படகு ஒன்றின் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட  இலங்கையர்கள் 12 பேர், இன்று அதிகாலை 12.30 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமான ஒன்றின் மூலம் அழைத்து வரப்பட்ட குறித்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜாயல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள் நீர்கொழும்பிலிருந்து படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர். இதில் 9 ஆண்களும் ஒரு பெண்ணும் மற்றும் 2 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.