‘தல’ அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ ஒகஸ்ட் மாதம் எட்டாம் திகதியன்று வெளியாகிறது.

‘தல’ அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இதில் தல அஜித்துடன் பொலிவுட் நடிகை வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தராங், அபிராமி வெங்கடாச்சலம், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.இவர் ஏற்கனவே சதுரங்கவேட்டை மற்றும் தீரன்அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

ஹிந்தியில் வெளியான‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்காக சில விடயங்களை புதிதாக இணைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வினோத். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பொலிவுட் நடிகை கல்கி கொச்லீன் இந்த படத்திற்காக குத்தாட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதியன்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியாவதாக தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.