பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் ஆலங்கட்டி மழை- வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகிறன. இந்நிலையில் அங்கு நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. 

திடீரென பெய்த கனமழையின் காரணமாக பள்ளத்தாக்கின் லஸ்வா என்ற பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கு மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் புகுந்து வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த  மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதற்குள் வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது