திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து  திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் நாளை காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதில் அனைத்து தமிழ் உறுவுகளும்  இணைந்து தமது எதிர்பை வெளியிடுவதுடன் எமது பூர்வீக அடையாளங்களை பாதுகாக்க  ஒன்றுதிரளுமாறு தென்கயிலை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளது.