ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Policemen scuffle with protesters inside a shopping mall in Sha Tin District in Hong Kong on July 14, 2019.

 ஹொங்ககொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக ஹொங்ககொங்கில் தீவிர போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் அறிவித்தார்.

 எனினும், அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களின் போது, பொலிஸார் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 இந்நிலையில், கேரி லாம் பதவி விலக வேண்டும், போராட்டத்தின்போது பொலிஸார் நடத்திய வன்முறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 10,000 பேர் ஹொங்ககொங்கின் ஷா டின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அவர்களில் சிலர் சீனாவிடமிருந்து ஹொங்ககொங் விடுதலை அடைய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பிரிட்டன் ஆட்சி காலத்து ஹொங்ககொங்  கொடியையும், சிலர் அமெரிக்கக் கொடியையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Protesters with placards reading "Strictly enforce the law, stop cross-border traders," march in an area popular with Chinese tourists for its pharmacies and cosmetic shops, in Hong Kong, Saturday, July 13.

 ஹொங்ககொங்கில் உண்மையான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 "பொலிஸார் பொய்யர்கள்', "ஹொங்ககொங்கைக் காப்போம்' உள்ளிட்ட பல்வேறு அரசு எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய பதாகையை பலர் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 முன்னதாக, ஹொங்ககொங்கில் சீனாவிலிருந்து ஏராளமானவர்கள் வந்து போட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், அதனால் ஹொங்ககொங் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி, சீன வர்த்தகப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கலைத்தனர். இதில் சிலர் காயமடைந்தனர்.

 இந்தச் சூழலில், ஹொங்ககொங் அரசுக்கு எதிராக மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Images via CNN