(எம்.எப்.எம்.பஸீர்)

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  பிரபாத் பரணவித்தாரன பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 

 

குறித்த பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்தில் இருந்த இரு  ரீ 56 ரக துப்பாக்கிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் அவர் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

ஏற்கனவே இந்த  துப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் கீழ் இடம்பெறும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமையவே இவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.