கிழக்கில் தமிழர்களின் இருப்பை வலுப்படுத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியாக செயற்பட முடிவு

Published By: Digital Desk 4

15 Jul, 2019 | 05:14 PM
image

கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியற் கட்சிகளை இணைத்து கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஓர் பாரிய அரசியற் கூட்டமைப்பை உருவாக்கி காத்திரமாகப்  பயணிப்பதற்கான ஓர் பூர்வாங்க கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும்  இணைந்து கொள்ள வேண்டும் என்ற கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷையை முன்னிறுத்தி ஈழத் தமிழர் பேரவை குறிப்பிட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருந்தது. 

ஈழத்தமிழர் பரப்பில் இயங்குகின்ற 9 அரசியல் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், மக்கள் முற்போக்குக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் , வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் அமைப்பு, தமிழர் சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு, ஐனநாயகத் தமிழர் ஆகிய அமைப்புகளும் கலந்து கொண்டன. 

ஒன்றிணைந்த வட கிழக்கு தமிழரின் பூர்வீக தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு, சமகாலத்தில் கிழக்கில் வாழும் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் இருப்பை வலுப்படுத்த ஓர் அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதில் காத்திரமாக இணைந்து பணியாற்றவும் பங்குபற்றிய அனைத்து அரசியல் தரப்புகளும் இணங்கியதோடு மேற்கொண்டு கூட்டணியை அமைப்பது சம்பந்தமாக காரியமாற்றவும் கட்சிகள் இணங்கியுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13