ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது கடந்த 31 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி நேற்றைய தினம் முடிவடைந்துள்ளது.

மொத்தமாக 10 நாடுகள் கலந்துகொண்ட இத் தொடரின் இறுதிப் போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை வீழ்த்தி முதன் முறையாக சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்ற முக்கிய பதிவுகள் பின்வருமாறு :

1. பரிசுத் தொகை

* சம்பியன்    - இங்கிலாந்து  - 4,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில் 28 கோடி)

* ரன்னர் அப் - நியூஸிலாந்து - 2,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில் 14 கோடி)

* அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகள் - இந்தியா, அவுஸ்திரேலியா - 800,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில் 5.6 கோடி)

2. தொடரின் ஆட்ட நாயகன் - கேன் வில்லியம்சன்

மொத்தம் - 578 ஓட்டம், சராசரி - 82.57, சதங்கள் - 2, அரைசதம் - 2, கூடிய ஓட்டம் - 148

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் ஆட்ட நாயகன்களாக தெரிவானவர்கள்

* 1992 - மார்ட்டின் குரோவ்  - நியூஸிலாந்து

* 1996 - சனத் ஜெயசூரியா - இலங்கை

* 1999 - லோன்ஸ் குளுஸ்னர் - தென்னாபிரிக்கா

* 2003 - சச்சின் டெண்டுல்கர் - இந்தியா

* 2007 - கிளேன் மெக்ராத் - அவுஸ்திரேலியா

* 2011 - யுவராஜ் சிங் - இந்தியா

* 2015 -  மிட்செல் ஸ்டாக் -  அவுஸ்திரேலியா

* 2019 -  கேன் வில்லியம்சன் - நியூஸிலாந்து

3. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் - பென்ஸ்டோக்ஸ்

ஆட்டமிழக்காது 84 ஓட்டம்

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன்களாக தெரிவானவர்கள்

* 1975 - கிளைவ் லோயிட் - மேற்கிந்தியத்தீவுகள்

* 1979 - விவ் ரிச்சர்ட்ஸ் - மேற்கிந்தியத்தீவுகள்

* 1983 - மொஹிந்தர் அமர்நாத் - இந்தியா

* 1987 - டேவிட் பூன் - அவுஸ்திரேலியா

* 1996 - அரவிந்த டி சில்வா - இலங்கை

* 1999 - ஷென் வோர்ன் - அவுஸ்திரேலியா

* 2003 - ரிக்கி பொண்டிங் - அவுஸ்திரேலியா

* 2007 - எடம் கில்கிறிஸ்ட் - அவுஸ்திரேலியா

* 2011 - மகேந்திர சிங் தோனி - இந்தியா

* 2015 - ஜேம்ஸ் போல்க்னர் - அவுஸ்திரேலியா

* 2019 - பென் ஸ்டோக் - இங்கிலாந்து

4. தொடரின் துடுப்பாட்ட சாதனைகள்

* அதிக ஓட்டம் - ரோகித் சர்மா - 648 ஓட்டங்கள்

* 300 ஓட்டங்களை கடந்த இன்னிங்ஸ்கள் - 26

* ஒரு இன்னிங்ஸில் அதிகபடியான ஓட்டங்கள‍ை பெற்ற வீரர் - டேவிட் வோர்னர் - 166 ஓட்டங்கள்

* அதிக ஓட்டங்களை குவித்த அணி - இங்கிலாந்து - 397/6

* அதிக சிக்ஸர்களை விளாசியவர்  - இயன் மோர்கன் - 22 

* அதிக நான்கு ஓட்டங்களை விளாசியவர்கள் - ஜோனி பெயர்ஸ்டோ, ரோகித் சர்மா - 67

* சிறந்த சராசரி - சஹிப் அல்ஹசன் - 86.57

* அதிக சதங்களை குவித்த வீரர்  - ரோகித் சர்மா - 5

* தொடர்ந்து அதிகபடியான அரைசதங்களை குவித்த வீரர்கள் -  விராட் கோலி, சஹிப் அல்ஹசன்

* அதிகபடியான அரைசதங்களை குவித்த வீரர் - சஹிப் அல்ஹசன் - 7

* அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் - கேன் வில்லியம்சன் - 771

5. தொடரின் பந்து வீச்சு சாதனைகள்

* அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர் - மிட்செல் ஸ்டாக் - 27

* ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவர் - செஹீன் அப்ரிடி  - 6/39

* சிறந்த சராசரி - மொஹமட் ஷமி - 13.79 ( நான்கு போட்டிகள்)

* அதிகபடியான ஓட்டம் அற்ற ஓவர் - பும்ரா - 9

* ஹெட்ரிக் சாதனை வீரர்கள் - ட்ரெண்ட் போல்ட், மொஹமட் ஷமி

Photo credit : ICC