இவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம், நாளை (16)  செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட இருப்பாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, (17)  புதன்கிழமை அதிகாலை 1.31 மணிக்கு ஆரம்பித்து,  அதிகாலை 4.29 மணி வரை நிகழவுள்ள இந்த சந்திர கிரகணம், புதன்கிழமை காலை 5.47 மணிக்கு முழுமையாக, விலகும்.

பூரணை தினத்தில் இடம்பெறும் இந்த முழுமையான சந்திர கிரகணத்தை, இலங்கை மற்றும்  இந்தியா உட்பட ஆசியாவின் அதிக நாடுகளிலும் மற்றும் அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய  நாடுகளிலும் மிகத் தெளிவாக அவதானிக்கலாம்.

மீண்டும் சந்திர கிரகணம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.