(எம்.எம்.சில்வெஸ்டர் )

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘சுப்பர் ப்ரொவென்ஷியல்’ கிரிக்கெட் போட்டித் தொடரில் தமிழ் பேசும் வீரர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த ஆறு பேரில் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்தும் , மட்டக்களப்பு, கண்டி மற்றும் கொழும்பிலிருந்து தலா ஒருவருமாக அடங்குகின்றனர்.

யாழ் மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், கமலாராசா இயலரசன், யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் தினோசன் ஆகியோர் தம்புள்ளை அணிக்காகவும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ் கொழும்பு அணிக்காகவும், கண்டி திரித்துவ கல்லூரியின் அபிஷேக் ஆனந்த குமார், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் எஸ்.ஷகிர்தன் ஆகியோர் கண்டி அணிக்காகவும் இணைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த அணியொன்றில் 15 வீரர்களும், 5 தயார் நிலை வீரர்கள் அடங்கலாக 20 வீரர்கள்  இடம்பெறுவதுடன் மொத்மாக 80 வீரர்கள் இப்போட்டித் தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இதன்படி விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் தினுசன், மொஹமட் சமாஸ், அபிஷேக் ஆனந்தகுமார் ஆகியோர் 15 வீரர்கள் கொண்ட குழாத்திலும், கமலராசா இயலரசன், எஸ். ஷகிர்தன் ஆகிய இருவரும் தயார் நிலை வீரர்கள் குழுவிலும் அடங்குகின்றனர்.