(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘சுப்பர் ப்ரொவென்ஷியல்’ கிரிக்கெட் போட்டி முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடராக நடத்தப்படும் இப்போட்டித் தொடர் நாளைய தினம் (16) ஆரம்பமாகின்றது இத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.

இப்போட்டித் தொடரில் சிறப்பாக செய்றபட்டு தமது திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 19  வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணம் மற்றும் 2020 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள 19’ வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் போன்ற தொடர்களுக்கு வீரர்களை இனங்காணுவதற்காக உதவியாக இருக்கும் என இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமைய பயிற்றுர் ஹசான் திலகரட்ண தெரிவித்தார்.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றும் இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்ளும். 

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும். போட்டிகள் அனைத்தும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்திலும், தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்திலும் நடத்தப்படவுள்ளன.

கொழும்பு அணிக்கு கமில மிஷாராவும், தம்புள்ளை அணிக்கு நிப்புன் தனஞ்சயவும், காலி அணிக்கு அபிஷேக் கஹதுடுவாராச்சியும், கண்டி அணிக்கு ருவன் பீரிஸும் அணித்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டி அட்டவணை

16 ஆம் திகதி கொழும்பு எதிர் தம்புள்ளை - தம்புள்ளை

16 ஆம் திகதி கண்டி எதிர் காலி - பல்லேகல

18 ஆம் திகதி கண்டி எதிர் கொழும்பு - தம்புள்ளை

18 ஆம் திகதி தம்புள்ளை எதிர் காலி - பல்லேகல

20 ஆம் திகதி காலி எதிர் கொழும்பு -  தம்புள்ளை

20 ஆம் திகதி தம்புள்ளை எதிர் கண்டி -பல்லேகல

22 ஆம் திகதி மூன்றாம் இடத்துக்கான போட்டி - தம்புள்ளை

23 ஆம் திகதி இறுதிப் போட்டி - தம்புள்ளை