மாற்­ற­ம­டைந்து வரும் நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சிக்­கேற்ப பாது­காப்­பா­னதும் செள­க­ரி­ய­மா­னதும் இல­கு­வா­ன­து­மான வங்­கிச்சேவை­ யினை உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு  வழங்கி வரு­வ­தாக செலான் வங்­கியின் சர்­வ­தேச நிதிச் சேவையின் சிரேஷ்ட முகா­மை­யாளர்  எம்.டி.அஸ்கர்அலி தெரி­வித்தார்.

வீர­கே­ச­ரிக்கு  வழங்­கிய செவ்­வியின் போதே  அவர் இதனை தெரி­வித்தார். 

அச்­செவ்­வியின் விபரம் வரு­மாறு,

கேள்வி: கடந்த வருடம் வெளி­நாட்டு பண­ம­னுப்­புதல் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.  அதற்­கான காரணம் என்­ன­வென கூற­மு­டி­யுமா?

பதில்: மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு ‍தொழில் நிமித்­த­மாக செல்­வோரின் தொகையில் ஏற்­பட்ட வீழ்ச்­சி­யா­னது கடந்த வருட பண­ம­னுப்­பு­தலில்  வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்த கார­ண­மாக அமைந்­துள்­ளது.

கேள்வி: வெளி­நா­டு­களிலிருந்து பண­ம­னுப்­பு­தலை அதி­க­ரிக்க செலான் வங்கி எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது.?

பதில்: வெளி­நாட்டு பண­ம­னுப்­புதல் நாட் டின் அந்­நிய செலா­வ­ணியில்  கணி­ச­மான பங்­க­ளிப்­பினை நல்­கி­வ­ரு­கி­றது எனலாம். எனவே வெளி­நாட்டு பண­ம­னுப்­பு­தலை அதி­க­ரிப்­பதன்  ஊடாக நாட்டின் அந்­நிய செலா­வ­ணியை உயர்த்த முடியும்.  

அதற்­கான பல்­வேறு செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதா­வது வெளி­நாட்டு பண­ம­னுப்­பு­தலை  அதி­க­ரிப்­பதை இலக்­கு­வைத்து நாம் பிர­சார வேலைத்திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். துரி­த­மா­கவும் குறைந்த சேவை கட்­ட­ணங்­க­ளு­டனும் பண­ம­னுப்­பு­த­லுக்­கான  வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளோம்.

வெளி­நாட்­டு­களிலிருந்து பணம் அனுப்­பு­கின்­ற­வர்­க­ளுக்கு பல்­வேறு பரி­சில்­களை வழங்கி அவர்­களை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கின்றோம். இந்த விடயம் நிபந்­த­னை­க­ளுக்கு  உட்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதே­போன்று மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­பு­ரியும்  எம்­ம­வர்­க­ளுக்கு  உதவும் முக­மாக எமது வங்கி அதி­கா­ரி­களை அந்­நா­டு­களில் பணிக்­க­மர்த்­தி­யுள்ளோம்.  வெளி­நாட்டு பண­ம­னுப்­பு­தலை அதி­க­ரிப்­ப­தற்கு  இவ்­வா­றான பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

கேள்வி: வெளி­நாட்டு பண­ம­னுப்­புதலுக் ­கென  விசே­ட­மான அட்டை  முறை­யொன்றை  அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதே.  அது பற்றி சற்று தெளி­வு­ப­டுத்த முடி­யுமா.?

பதில்: ஆம் இது Remittances அட்டை என அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்த அட்­டையை பயன்­ ப­டுத்­து­வதன் மூலம் வாடிக்­கை­யா­ளர்கள் பல்­வேறு நன்­மை­ய­டை­கின்­றனர். இந்த அட்­டை­யினை  வைத்­தி­ருப்­ப­வ­ருக்கு  எந்­த­வொரு நாட்டிலிருந்தும் எந்த சந்­தர்ப்­பத்­திலும்  பணத்­தினை அனுப்­பலாம். 

இந்த அட்­டை­யினை வைத்­தி­ருப்­பவர் எந்­த­வொரு வங்­கி­யிலும் கணக்­கினை வைத்­தி­ருக்க வேண்­டிய கட்­டாயம் கிடை­யாது.

தமது குறித்த அட்­டைக்கு வெளி­நாட்­டி­லி­ருந்து பணம் அனுப்­பப்­படும்போது குறித்த அட்­டை­யினை பயன்­ப­டுத்தி பணத்­தினை பெறலாம். இந்த அட்­டைக்கு அனுப்­பப்­படும் பணத்தின் முழுத்­தொ­கை­யி­னையும் எடுக்­காமல் குறிப்­பிட்ட ஒரு தொகை­யினை மட்டும் எடுத்தால் ‍எஞ்­சிய தொகைக்கு வட்டி வழங்­கப்­படும். இது மிகவும் பாது­காப்­பா­னதும்  செள­க­ரி­ய­மா­ன­து­மான  ஒரு வழி­மு­றை­யாகும். இந்த அட்­டை­யினை பொருட்­கொள்­வ­ன­விற்கும் பயன்­ப­டுத்­தலாம்.

காலை மாலை என இல்­லாது எந்த சந்­தர்ப்­பத்­திலும்  குறித்த வங்­கி­யிலோ அல்­லது பணம் மீளப்­பெறும் நிலை­யங்­க­ளிலோ அனுப்­பிய பணத்தைப் பெற்­றுக்­கொள்­ளலாம். அத்­துடன் டொல­ராக ‍அனுப்­பினால் டொல­ரா­கவோ யூரோ­வாக அனுப்­பினால் யூரோ­வா­கவோ அல்­லது ரூபா­விலோ பெற்­றுக்­கொள்ளும் வசதி இந்த அட்­டையில் காணப்­ப­டு­கி­றது. அவ­சர தேவைக்கு அனுப்­பிய பணத்தை  உட­ன­டி­யாக பெற­மு­டி­ய­வில்லை  என்றால்  அதில் பிர­யோ­சனம் இல்லை. எமது இந்த புதிய அட்­டையின் மூலம் அந்த பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது வெளி­நாட்டிலிருந்து அனுப்­பிய பணத்தை துரி­த­மாக  பெற்­றுக்­கொள்­ளலாம். வெளி­நாட்டு பண­வ­னுப்­பு­த லில் நாம் கூடுதல் கவனம் செலுத்­தி­வ­ரு­கின்றோம்.  வெளி­நா­டு­களிலிருக்கும் நம்­ம ­வர்­க­ளுக்கு சிறந்த துரித சேவை­யினை வழங்­கி­வ­ரு­கின்றோம். லண்டன், அமெ­ரிக்கா கனடா மற்றும் மத்­திய கிழக்கு போன்ற நாடு­களில் நாம் பல­மான கட்­ட­மைப்­புடன் வெற்­றி­க­ர­மாக செயற்­பட்டு வரு­கின்றோம்.

கேள்வி: செலான் வங்­கியின்  Mobile Banking App பற்றி சற்று தெளி­வு­ப­டுத்த  முடி­யுமா.?

பதில்:  செலான் வங்­கியின்  Mobile Banking App இன் ஊடாக பல்­வேறு நன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்கள்  செலான் வங்­கியின் App ஊடாக எந்­த­வொரு சூழலிலிருந்தும் தமது நிதிக்கொடுக்கல் வாங்­கல்­களை இல­கு­வா­கவும் பாது­காப்­பா­கவும்  மேற்­கொள்ள முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி இன்று சகல துறை­க­ளிலும் தாக்கம் செலுத்­தி­யுள்­ளது. அதே­போன்று வங்கித் துறை­யிலும் அது பாரிய தாக்கம் செலுத்­தி­யுள்­ளது. இந்த தொழி­ல்நுட்ப வளர்ச்­சிக்கு  ஏற்ப மக்­க­ளுக்கு துரி­த­மா­னதும் பாது­காப்­பா­ன­து­மான  சேவை­யினை வழங்­கு­வதே எமது நோக்­க­மாக இருந்­தது. அதற்­க­மை­யவே Mobile Banking App இனை நாம் அறி­மு­கப்­ப­டுத்­தினோம். இந்த App இனை என்­றொயிட் போன்கள் மற்றும் டெப்­களில் பயன்­ப­டுத்­தலாம். இந்த App அன் ஊடாக வங்கி கணக்கு மீதி வங்­கியில் வைப்­பி­லி­டப்­பட்ட  பணம் மற்றும் பெறப்­பட்ட  முழு விப­ரங்­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளலாம். அதே­போன்று  இல­கு­வாக கட்­ட­ணங்­களை செலுத்தும் வச­தியும் இந்த  Mobile Banking Appஇன் ஊடாக  காணப்­ப­டு­கி­றது. அதா­வது நேரத்தை வீண­டிக்­காமல்  பாது­காப்­பான  முறையில் இருந்த இடத்தில் இருந்­த­வாறே மேற்கூறிய அனைத்தையும் செய்துகொள்ளும்  வாய்ப்பு  இந்த App இல் உள்ளது.  

செலான் வங்கி எப்பொழுதுமே வாடிக்கை யாளர்களுக்கு  செளகரியமான சிறந்த சேவை யினை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகிறது. அதாவது வங்கித் துறையில் விடுமுறை நாளான  சனிக்கிழமை யில் வங்கியை திறந்து வாடிக்கையாளர்களு க்கு மேலதிக சேவையினை முதல் முதலில் அறிமுகம் செய்தது நாமே. 

அதேபோன்று தொழில்நுட்ப வசதிகள் குறைந்த காலத்தி லேயே வங்கிக் கிளைகளுக்கிடையில் பணத் தினை வைப்பிலிடல் மற்றும் மீளப்பெறல் போன்ற சேவைகளை முதல் முதலில் செலான் வங்கியே இலங்கையில் ஆரம்பித் தது எனவும் அவர் தெரிவித்தார். 

- எம். நேசமணி