கீழ்ப்பக்க முதுகு வலிக்கான நிவாரணம்

Published By: Digital Desk 4

15 Jul, 2019 | 01:13 PM
image

இளைய சமுதாயத்தினர் இன்றைய திகதியில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும். அதனை சார்ந்த சேவைத் துறையிலும் தான் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் முதுகு வலி மற்றும் கீழ் பக்க முதுகுவலியை அதிகளவில் எதிர்கொள்கிறார்கள். இந்த கீழ் பக்க முதுகுவலிக்கு முழுமையான நிவாரணமளிக்கும் புதிய வலி நிவாரண சிகிச்சை அறிமுகமாயிருக்கிறது.

கீழ் பக்க முதுகுவலியை முதலில் நீங்கள் வராமல் தடுப்பதே சிறந்தது. அதற்கு முதலில் நீங்கள் அமர்ந்து பணியாற்றும் இருக்கை, உங்களுடைய உடல் வாகுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். நீங்கள் பணியாற்றும் கணினி, உங்களுடைய கண் பார்வையிலிருந்து மருத்துவர்கள் பரிந்துரைத்த இடைவெளியில் அமைந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தும் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய இருக்கையிலிருந்து எழுந்து, 60 முதல் 75 steps தளர்வாகவோ அல்லது இயல்பாகவோ நடந்து பிறகு மீண்டும் இருக்கையில் அமர்ந்து,  பணியைத் தொடரவேண்டும். 

இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய முதுகுத்தண்டில் பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் அழுத்தம் தடுக்கப்படுகிறது. அத்துடன் முதுகு வலி ஏற்பட்டால், அதனை உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அது வலி நிவாரண சிகிச்சையாக இருந்தாலும் அல்லது குணப்படுத்தக்கூடிய சிகிச்சையாக இருந்தாலும், சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

அதன்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையில் அதாவது எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனையில் உங்களுடைய முதுகுத்தண்டின் எத்தகைய திசுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்து, சிகிச்சையும், வலிநிவாரண சிகிச்சையும் அமையும். முதுகு வலி ஏற்பட்டு, உங்களுடைய இடது கால் அல்லது வலது காலின் மூட்டுகளுக்கு  கீழ் பகுதியில் வலி இருந்தாலோ அல்லது வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, உங்களது முதுகுவலி, கீழ் பக்க முதுகிற்கும் பரவியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு வலி நிவாரண மருத்துவர்கள், இயன்முறை மருத்துவ பயிற்சியும், அதற்குரிய மருந்து மாத்திரைகளையும் வழங்கி இதனை குணப்படுத்துவர்.

முதுகு வலி மற்றும் கீழ் பக்க முதுகு வலிக்கு வலி நிவாரண சிகிச்சை வழங்கப்பட்டாலும், மீண்டும் முதுகு வலி வராதிருக்க, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடைமுறையை மருத்துவர்கள் பரிந்துரைத்த வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

கீழ் பக்க முதுகு வலி ஐம்பது வயதைக் கடந்த முதியவர்களுக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களை பரிசோதனை செய்து, எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா...? என்பதனை உறுதிசெய்து கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்தே அவர்களுக்கான நிவாரண சிகிச்சை தொடர இயலும்.

டொக்டர் விஜயராகவன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30