வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து நேற்று மாலை 2 மணியளவில்  சிறைச்சாலைக்கு வெளியே சென்ற  நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற நபர் உட்பட பலர் சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போது தப்பித்து சென்றுள்ளார்.

வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக  திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தப்பிச் சென்ற கைதியை தேடி கண்டு பிடித்து சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.