தலையில் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடுகே உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் ஆட்லறி படைப்பிரிவு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் விளையாட்டுகளுக்கான பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுமித், தனது 55 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.

தலையில் படுகாயமடைந்து தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.