வாட்ஸ்அப் செயலியில் எண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் பயனர்கள் அவ்வாறு செய்ய வேறு செயலியை பயன்படுத்த தேவை இருக்காது.

WhatsApp for Android Gets Media Visibility Feature, New Contacts Shortcut

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் சேட் முகப்பில் உள்ளபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுக்கிறது. இத்துடன் மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் க்விக் எடிட் மீடியா ஷோர்ட்கட் என அழைக்கப்படுகிறது.

உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி இலங்கைவில் அதிக பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் அதில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறான புதிய அம்சமாக க்விக் எடிட் மீடியா ஷோர்ட்கட் என்ற பெயரில் உருவாகிறது.

வாட்ஸ்அப் க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் ஸ்கிரீன்ஷாட்

புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது என்றும், விரைவில் இது வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷொட்களும் வெளியாகியுள்ளன. இதில் வாட்ஸ்அப் செயலியினுள் புகைப்படம் திறக்கப்பட்டதும் எடிட் பொத்தான் காணப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி காணப்படுகிறது.

புதிய அம்சத்தின் மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படம் பயனர்களின் ஸ்மார்ட் தொலைபேசியில் சேமிக்கப்படுவதில்லை. இதனால் ஸ்மார்ட் தொலைபேசியின் சேமிப்பகமும் பாதிக்கப்படாது. ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டெலிகிராம் போன்ற தளங்களில் கிடைக்கிறமை குறிப்பிடத்தக்கது.