விமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்குகையில் நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு சுவீடன் நாட்டின் உமெயா எனும் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆற்றிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் சேத விபரங்கள் குறித்து சரியான தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

சுவீடன் நேரப்படி பிற்பகல் 2.04 மணியளல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவீடன் நாட்டு மீட்பு படையினர் தெரிவித்துள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.