பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கும் இரகசிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .

முல்லைத்தீவு மணலாறு  பகுதியில் சிங்கள மக்களுடனான "வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் சகோதரத்துவத்தின் மக்கள் சந்திப்பு "   என்னும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள விமல் வீரவன்ச குழுவினர் முன்னதாக கொக்கிளாய் விகாரை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள விகாரை என்பனவற்றுக்கு இரகசியமாக திடீர் விஜயம் மேற்கொண்டனர்.

.

இந்த திடீர் விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள்  பாராளுமன்ற  உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவியபோது கருத்துக்கள் எதையும் கூற மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது..