(எம்.மனோசித்ரா)

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை மிக அழகாக அரங்கேற்றப்பட்ட நாடகமாகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் கூட குற்றஞ்சாட்ப்பட்டவர் தவிர ஏனையோரை மீண்டும் பதவியேற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகி குற்றஞ்சாட்டப்பவருடன் ஒன்றித்து விட்டார்கள். 

அதாவது குற்றஞ்சாட்டபட்டவரும், குற்றஞ்சாட்டப்படாதவர்களும் ஒன்றாகிவிட்டார்கள். எவ்வாறிருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.