விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சிமோனா ஹலேப் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

லண்டனில் நேற்றிரவு நடைபெற்ற மகளிர் இறுதி ஆட்டத்தில் 23 முறை சாம்பியனான செரீனாவும், முன்னாள் நம்பர் வன் வீராங்கனை சிமோனா ஹலேப்பும் மோதினர்.

56 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை செரீனாவை வீழ்த்தி ரேமேனிய வீராங்கனை சிமோனா சம்பியனானார்.

இந்த தோல்வியின் மூலம் மார்க்ரெட் கோர்ட் நிகழ்த்திய 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்யும் வாய்ப்பும் செரீனாவுக்கு கை நழுவிப் போனது.

இதேவேளை விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்-முன்னாள் சாம்பியன் பெடரர் உள்ளிட்டோர் இன்று எதிர்கொள்கிறார்.