இசைக்­கான தேசிய விருதை சிறந்த பின்­னணி இசை, சிறந்த பாடல் இசை­ய­மைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்­கி­றது என இசை­ய­மைப்­பாளர் இளை­ய­ராஜா கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

'தாரை தப்­பட்டை'திரைப்­ப­டத்­துக்­காக சிறந்த பின்­னணி இசைக்­கான விருது இளை­ய­ரா­ஜா­வுக்கு வழங்­கப்­பட்­டது. ஆனால்,

அந்த விரு­தினை பெற்­றுக்­கொள்ள இளை­ய­ராஜா செல்­ல­வில்லை.

இது குறித்து திரு­வண்­ணா­மலை ஸ்ரீ ரமண ஆசி­ர­மத்தில் இருந்து ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு இளை­ய­ராஜா அளித்த பேட்­டியில், "கடந்த 2010-ஆம் ஆண்டு வரை சிறந்த இசை­ய­மைப்­புக்­கான தேசிய விருது என்று ஒரு பிரிவு மட்­டுமே இருந்­தது. சாகர சங்­கமம், சிந்து பைரவி, ருத்ர வீணா போன்ற திரைப்­ப­டங்­க­ளுக்­காக சிறந்த இசை­ய­மைப்­புக்­கான விரு­தினை நான் பெற்­றி­ருக்­கிறேன்.

அந்த நடை­மு­றையை மாற்றி சிறந்த இசை­ய­மைப்பு (பாடல்), சிறந்த பின்­னணி இசை­ய­மைப்பு என இரு பிரி­வு­களில் தற்­போது தேசிய விருது வழங்­கப்­ப­டு­கி­றது.

இந்த ஆண்டு எனக்கு சிறந்த பின்­னணி இசைக்கும், ஜெயச்­சந்­தி­ர­னுக்கு சிறந்த இசை­ய­மைப்­புக்கும் விருதுகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இப்­படி இசைக்­கான விருதை

இரண்­டாக பிரித்­துள்­ளது நான் ஏதோ பாதி வேலையை மட்­டுமே சிறப்­பாக செய்­தி­ருப்­பது போன்ற தோற்­றத்தை உரு­வாக்­கு­கி­றது.

இசைக்­கான தேசிய விருதை சிறந்த பின்­னணி இசை, சிறந்த இசை­ய­மைப்பு (பாடல்) என பிரிக்க தேவை என்ன இருக்­கி­றது? ஒரு­வேளை தேசிய விருது வழங்கும் குழு இசை­ய­மைப்­பா­ளர்கள் பாதி வேலையை மட்டும் சிறப்­பாக செய்தால் போதும் என்­பதை ஊக்­கு­விக்­கி­றதா?" என்றார்.