அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீனஸ் நகரை சேர்ந்த 57 வயதான பிரெட்டி மேக் என்பவர் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் செல்லப்பிராணிகளாக 10 க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் பிரெட்டி மேக் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டிற்கமைய பிரெட்டி மேக் தங்கியிருந்த வீட்டை பொலிஸார் தீவிர சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.அப்போது, அவரது வீட்டின் அருகே மனித எலும்புகள் துண்டு துண்டாக கிடப்பதையும், அதில் நாயின் முடி ஒட்டியிருப்பதையும் கண்டுபிடித்தனர். மேலும் அங்கு கிடந்த கிழிந்த ஆடைகளை கொண்டு விசாரித்ததில், இறந்தவர் பிரெட்டி மேக் என்பது உறுதிசெய்யப்பட்டது.

பிரெட்டி மேக்கை, அவர் வளர்த்த நாய்களே கடித்துக் கொன்று அவரது உடலை தின்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை வயது மூப்பு காரணமாக இறந்து கிடந்த பிரெட்டி மேக்கின் உடலை நாய்கள் தின்றனவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.