தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை காட்டி வலதுபக்கம் திருப்புவது போன்றது ; அங்கஜன் 

Published By: Digital Desk 4

14 Jul, 2019 | 04:54 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை காட்டி வலதுபக்கம் திருப்புவது போன்றது என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சாடுகின்றார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி கண்ணன் ஆலயத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனால் விசேட வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வழிபாட்டின் பின்னர் மக்களுடன் அவர் கலந்துரையாடினார். குறித்த கலநதுரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் நடைபெ்ற நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவினர். இதன்போது பதிலளிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை இல்லாத ஆதரவினையே வழங்கி வருகின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் அடிமைகள். அவர்கள் தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினையே வழங்குகின்றனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என பல்வேறு கருத்துக்களை கூறியவர்கள், பாராளுமன்றில் எவ்வித நிபந்தனையும் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எமது அபிலாலைகளை விட்டுவிட்டு காணக்காளர் நியமனத்தில் நிற்கின்றனர். எமது அபிலாசைகள் இல்லாது போய்விட்டது. 

இப்போது இஸ்லாமிய  மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு ரணில் விக்கரமசிங்க அந்த நியமனம் உங்களிற்குதான் என வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் நலன் சார்ந்து செயற்படாது தமது நன்மைகளிற்கானவும், தமது நலன்களிற்காகவும் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

எஞ்சி இருக்கின்ற காலத்திலாவது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றகூடியவாறு அவர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், தேர்தல் நெருங்குகின்றபோது மாத்திரம் மக்கள் நலன்சார்ந்து செயற்படுவது போன்று காட்டி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

குறித்த சந்திப்பின்போது, தமது அபிலாசைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிடம் முதியவர் ஒருவர் ஆதங்கத்தை தெரிவித்தார். தமது பிரச்சினைகளை தீர்க்ககூடிய வகையில் செயற்பட வேண்டும் எனவும், எமது அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் கண்ணீருடன் தெரிவித்தார். 

நாடற்ற அநாதைகளாக நிற்கின்றோம். அனைத்தையும் இழந்துவிட்டோம். எமக்கில்லை என்றாலும் எமது பிள்ளைகளிற்காக நல்லதொரு தீர்வை பெற்று தாருங்கள் என அவர் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01