'119' என்ற பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு அழைப்பினை மேற்கொண்டு பாராளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுத்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

பண்டாரவளை, எல்ல நகரத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த கொழும்பு பொரளை குருப்பு மாவத்தைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டள்ளார்.

சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.