(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு பாதுகாப்பு பிரதானிகளையும், புலனாய்வு பிரிவினரையும் அழைப்பது எதிர்காலத்தில் புலனாய்வு பிரிவிற்கும், தேசிய பாதுகாப்பிற்கும்  மாறுப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட  சாதகமாக அமையும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை  கொடுக்கப்பட்டது. அதன் காரணமாகவே பயங்கரவாதம்   அழிக்கப்பட்டது.

நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்  அனைத்து இன மக்களுக்கும் பொதுவான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படுவதுடன். தேசிய பாதுகாப்பிற்கே எந்நிலையிலும் முன்னுரிமை கொடுக்கப்படும் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒருமித்தே செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு தெரிவித்தார்.