(நா.தினுஷா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை  பாராளுமன்ற உறுப்பினர்கள் தயராகி வருகின்றனர். 

எதிர்வரும் 23 ஆம் திகதி  இந்த குற்றப்பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே  பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.