(செ.தேன்மொழி)

பலங்கொட – போம்புவ பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போம்புவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய தர்மதாச மாகம்மன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியமையினாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.