முதலாவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.