(எம்.மனோ­சித்ரா)

இஸ்லாம் மதத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பாக ஏனைய மத மக்கள் மத்­தியில் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட கருத்­துக்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள்  கவ­னத்தில் எடுத்து இதற்­கான தீர்­வொன்றை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை இஸ்லாம் புத்­தி­ஜீ­விகள் சங்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

குர்ஆன் மற்றும் இஸ்­லா­மிய சட்­டங்கள் குறித்து திரி­பு­ப­டுத்­தப்­பட்ட கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறித்து அகில இலங்கை இஸ்லாம் புத்தி ஜீவிகள் சங்­கத்­தினர் அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் வர­கா­கொட ஸ்ரீ ஞான­ரத்ன தேரரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். 

இந்தச் சந்­திப்பின்போது அகில இலங்கை முஸ்லிம் புத்தி ஜீவிகள் சங்­கத்தின் ஊடக செய­லா­ள­ரினால் சிங்­கள மொழியில் மொழி பெயர்க்­கப்­பட்ட குர்ஆன் மகா­நா­யக்க தேர­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. 

இதன்போது அநு­நா­யக்க மெத­கம தம்­மா­னந்த தேரர் தெரி­விக்­கையில், இஸ்லாம் மதத்தைச் சார்ந்­தவர் அல்ல என்று நீங்கள் குறிப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக எம்மால் முன்­னெ­டுக்­கப்­படக் கூடிய நட­வ­டிக்­கைகள்  குறித்து இஸ்லாம் புத்திஜீவிகள் சங்க பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்­வி­யெ­ழுப்­பினார். 

அத்­தோடு, இஸ்­லா­மிய கல்வி  முறை­மை­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் குறித்து நீங்கள் கவனம் செலுத்­த­வில்­லையா என்றும் மகா­நா­யக்க தேரர் அவர்­க­ளிடம் கேள்­வி­யெ­ழுப்­பினார். இதற்கு பதி­ல­ளிக்­கையில் , அந்த விட­யங்கள் கல்வி அமைச்­சுக்கு கீழேயே காணப்­ப­டு­கின்­றன என்று குறிப்­பிட்­டார்கள். 

எனினும் மதம் சார்ந்த விட­யங்­களில் சமய புத்­த­கங்­களில் என்ன விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன என்பது குறித்து நாம் அவதானம் செலுத்துவோம். எனவே நீங்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது என்பதே எமது நிலைப்பாடு என்று மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.