(நா.தனுஜா)

வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முறைப்பாடளித்த பெண்களை எச்.எஸ்.ஜீ பரிசோதனைக்கு உட்படுத்துவதன் ஊடாக அவர்களுக்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது.

இந்த இலகுவான பரிசோதனையை முன்னெடுப்பதன் ஊடாகவே முறைப்பாடளித்தவர்கள் மலட்டுத்தன்மை ஆக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்ற இறுதி முடிவைக் கண்டறிய முடியும். 

அதனைவிடுத்து சத்திரசிகிச்சைக் கூடத்தில் பணியிலிருந்த தாதிமார் மற்றும் வைத்திய சேவையாளர்களிடம் இவ்விடயம் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்ட முனைவது நேரத்தையும், நிதியையும் வீணடிக்கும் செயலாகும் என்று பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ.பெரேரா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாட்டின் மூத்த மகப்பேற்று வைத்தியரும், மகளிர் நோய் தொடர்பான இலங்கை மகப்பேற்று வைத்தியக் கல்லூரியின் முன்னாள் தலைவரும் காப்பாளருமான பேராசிரியர் வில்பர்ட் எஸ்.ஈ.பெரேரா குருணாகலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரத் வீரபண்டாரவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.