(நா.தனுஜா)

அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அவர்களது முயற்சியை நாங்கள் தோற்கடித்திருக்கிறோம். 

இந்த வெற்றியில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினக் கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். கடந்த வருடம் ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியின் போதும் விட்டுவிடாமல் போராடி, நியாயம் பெற்று நாங்கள் ஆட்சியமைத்ததை மறக்கக் கூடாது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.