சத்­தீஸ்­காரில் பால்­ராம்பூர் மாவட்­டத்தில் பஸ் ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து விபத்­துக்­குள்­ளா­னதில் 13 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 53 பேர் படு­கா­ய­ம­டைந்­த நிலையில் மருத்­துவமனையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

சத்­தீஸ்கார் மாநில தலை­நகர் ராம்­பூரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் காத்­வா­விற்கு நேற்­று­முன்­தினம் இரவு சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று இரவு 10:30 மணி­ய­ளவில் தால்­தோவா என்ற இடத்தில் சிறிய ஆற்றின் பாலத்தில் சென்று கொண்­டி­ருந்த போது விபத்­துக்­குள்­ளா­னது.

இது தொடர்பில் பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

குறித்த பஸ் சாரதி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக பஸ்ஸை கட்­டுக்குள் கொண்­டு­வர முயற்­சித்­துள்ளார். அப்­போது பஸ் அவ­ரு­டைய கட்­டுப்­பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தண்ணீர் இல்­லாமல் வறண்டு கிடந்த சிறிய ஆற்றில் விழுந்துள்ளது.

பஸ் விழுந்த வேகத்தில் இரண்டு, மூன்று முறை புரண்டு உள்­ளது. இதனால் சம்­பவ இடத்­தி­லேயே 13 பேர் உயி­ரி­ழந்­து­விட்­டனர். காயம் அடைந்­த­வர்­களில் 16 பேரது நிலை­ மிகவும் மோச­மாக உள்­ளது. அவர்கள் அம்­பி­காபூர் மாவட்ட மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர். காயம் அடைந்த 37 பேர் பால்­ராம்பூர் மருத்­து­வ­ம­னையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.