(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மரண தண்டனையை இல்லாதொழிக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனி நபர் பிரேரணையை  அரச வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சட்டமா அதிபரின் நிலைப்பாடு எனவென கேட்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சட்டத்தின் மூலமும் மரண தண்டனையை விதிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதனை இல்லாதொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால்  தனிநபர் பிரேரணை  பாராளுமன்றத்தில் முன்முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இப்பிரேரணை இன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில்  உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் இப்பிரேரணையை அரச வர்த்தமானியில் இன்றே இயலச் செய்வதற்காக 52 மற்றும் 53 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் இடை நிறுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த பிரேரணை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு அவரது நிலைப்பாடு என்றவென கேட்கவும் அதன் பின்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து தீர்மானம் எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.