(நா.தினுஷா)

பாராளுமன்ற  உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன் மீது  முன்வைக்கப்பட்டுள்ள பாராதூரமான  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டியது  அவசியமாகும்.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சகல ஆதாரமும் எங்களிடம் உள்ளது.  அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அதாரங்களை  ஜனாதிபதி மைரத்திரிபால சிறிசேன உட்பட பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவினர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும்  இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகுந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படா விட்டால் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். 

இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது ; 

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.எனவே  உரிய விசாரணை இல்லையேல் ஆதாரங்களுடன் நீதிமன்றம் செல்வோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.