முஸ்லிம் பெண்களுக்கான முதலாவது உடற் பயிற்சிகூடம் பிரித்தானியாவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

தென் வேல்ஸில் கார்டிப் பிராந்தியத்தில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த உடற் பயிற்சிகூடத்தில் ஆண்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப் படமாட்டாது என்பதால் முஸ்லிம் பெண்கள் தமது முக்காடுகள் மற்றும் உடலை மூடிய ஆடைகள் என்பவற்றைக் கழற்றி வைத்து விட்டு சாதாரண ஆடைகளில் சுதந்திரமாக உடற் பயிற்சிகளில் ஈடுபட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம் பெண்களில் 18 சதவீதத்தினரே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதாக அந்நாட்டு விளையாட்டுத் துறை பிரிவு தெரிவிக்கிறது.