(செ.தேன்மொழி)

இரத்தினபுரி - காவத்தை பகுதியில் மிக சூட்சுமுமான முறையில் சட்டவிரோதமாக மதுபானத்தை தயாரித்து விற்று வந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

காவத்தை - நீலகம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நீலகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 60 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டன.

சந்தேக நபருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.