(செ.தேன்மொழி)

எம்பிலிபிட்டிய பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான 21 வயதுடய இளைஞனிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாத் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.