தைரொய்ட் புற்றுநோய்க்கு அண்மையில் புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது.

கழுத்தில் பின்பகுதியில் சிறிய அளவில் உள்ள ஒரு சுரப்பி தான் தைரொய்ட் இதில் புற்றுநோய் ஏற்படுவது என்பது அரிதானது. உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் குறைவானவர்களுக்கே இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புற்றுநோய் பிரிவுகளில் இதுவும் ஒன்றாக மாறி உள்ளது.

இத்தகைய புற்றுநோய் ஆண் பெண் மற்றும் வயது வரம்பின்றி அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. தைரொய்ட் புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறியும் இருப்பதில்லை. கழுத்தின் முன் பகுதியில் சிறிய கட்டி, குரலில் மாற்றம், பேசுவதில் சிரமம், உணவு மற்றும் தண்ணீர் விழுங்குவதில் சிரமம், மூச்சுத்திணறல், தொண்டை மற்றும் கழுத்துப் பகுதியில் வலி ஆகியவை இதன் அறிகுறிகள் எனலாம்.

தைரொய்டைப் பொருத்தவரை காம்பு வடிவம், நுண்ணறை, திசுக்களின் தன்மை மாற்றம் என பல வகைகள் உண்டு. இந்நிலையில் காம்பு வடிவம், நுண்ணறை வகைதான் 90% உள்ளன. இவற்றில் ஆரம்ப நிலையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம். இத்தகைய புற்றுநோய்க்கு அயோடின் கதிரியக்க சிகிச்சை, சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, டார்கெட் தெரபி என பல நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன, மேலும் சிலருக்கு தைரொய்ட் சுரப்பியை அகற்றி அதற்கு மாற்றாக ஹோர்மோன் சுரப்பை செயற்கையாக செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்ட நவீன மருந்து, இத்தகைய புற்றுநோய் செல்களின் மீது சிறப்பாக செயற்பட்டு, அதனை அழித்து, தைரொய்ட் சுரப்பியை பாதுகாக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. தைரொய்ட் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்துசிகிச்சை அளித்தாலும், வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.