பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாட்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு 7 நீதியரசர்கள் முன்னியலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்ட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கராவாதிகளால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக இவர்களுக்கு வழக்குதாக்கல் செய்யப்பட்டுது.

இந்நிலையில், குறித்த வழக்கு இம்மாதம் ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.