(செ.தேன்மொழி)

நாரம்மல பகுதியில் நிதி மோசடியில் ஈடுப்பட்டு வந்த பங்களாதேஷ் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரம்மல நகரத்தில் நேற்று கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மிக சூட்சுமமான முறையில் நிதி மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ள 54 வயதுடைய சந்தேக நபர், 20 இலட்சம் ரூபாய் தொகை பணத்தை இவ்வாறு மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.