கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயலால் 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளார்கள்.

கிரீஸ் நாட்டில் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஹல்கிடிகி திகழ்கிறது. அங்கு திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இதேவேளை, குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ள நிலையில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரும் காணமல்போயுள்ளார்.

20 நிமிடங்கள் மட்டுமே நீடித்த புயல் பலத்த சேதத்தை உண்டாக்கியுள்ளதாகவும், 5 ஆயிரம் மின்னல் தாக்கியதாகவும் கிரேக்க தேசிய ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணியில் 140 வீரர்கள் ஈடுபட்டுள்ளதோடு. புயலையடுத்து கிரீஸின் வடக்கு பகுதியில் அவசார காலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.