அவுஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றைய அரையிறுதி போட்டியின் போது  நடுவரை ஆபாசவார்த்தைகளை பயன்படுத்தி ஏசிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் போட்டி தடையிலிருந்து தப்பித்துள்ளார்

நடுவர் குமார்தர்மசேன பிழையான தீர்ப்பை வழங்கிய பின்னரே ஜேசன் ரோய் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு 223 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த வேளை ரோய்  85 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அவர் பட் கமின்சின் பந்தை புல் சொட் விளையாட முயன்றார்.பந்தை பிடித்த அவுஸ்திரேலிய 

விக்கெட் காப்பாளர்  நடுவரிடம் ஆட்டமிழப்பு முறைப்பாட்டை செய்தார்.

ஜேசன் ரோய் ஆட்டமிழந்துவிட்டாரா என்பதை  தீர்மானிக்க முடியாமல் தடுமாறியவர் போல காணப்பட்ட குமார் தர்மசேன  பின்னர் ரோய் ஆட்டமிழந்துவிட்டார் என தீர்ப்பளித்தார்.

நடுவரின் தீர்ப்பை மறு ஆய்விற்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாததால் சிறிது நேரம் களத்தில் நின்றுவிட்டு ஜேசன் ரோய் மைதானத்திலிருந்து வெளியேற தொடங்கினார்,அவ்வேளை அவர் சில வார்த்தை பிரயோகங்களிலும் ஈடுபட்டார்

ஜேசன்ரோய்  எவ் வார்த்தைகளை பயன்படுத்தியமை ஸ்டம்ப் மைக்கின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜேசன் ரோய் நடந்துகொண்ட விதத்திற்காக அவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் போட்டி தடை விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட போதிலும் அவரின் போட்டி கட்டணத்தில்  30 வீத அபராதத்தை விதித்துள்ள அதிகாரிகள் நன்னடத்தை மீறலிற்காக இரண்டு புள்ளிகளையும்  ரோய்க்கு எதிராக சேர்த்துக்கொண்டுள்ளனர்.

இதேவேளை ஜேசன்ரோய் அடித்த பந்து துடுப்பில் படாமல் விக்கெட் காப்பாளரின் கைக்கு சென்றமை ரீபிளேக்கல் மூலம் உறுதியாகியுள்ளது.