கனடா விமானம் ஒன்று வான்குவரில் இருந்து சிட்னி நகருக்கு பயனமானபோது சீரற்ற காலநிலை காரணமாக விமானம் நிலைதடுமாறியதில் பயணிகள் காயமடைந்தனர்.

சுமார் 284 பேர் வரை பயணித்துக்கொண்டிருந்த போயிங்  777-200 ஜெட் என்ற விமானத்திலேயே இந்த பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வான்கூர் சர்வதேச விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கப்பட்டதுடன்,  காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் விமானம் நிலை தடுமாறியதில் 35 பயனிகள்  காயங்களுக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.