கடந்த பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின்  நடிப்பில் வெளியாகிய பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகி மக்களின் சிறப்பு வரவேர்ப்பை பெற்றது.

இந்நிலையில் எதிர்வரும் தீபாவளிக்கு விஜய் நடிக்கும் பிகில் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். 

அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

 இதனால் விஜய் படத்துக்கு போட்டியாக எந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார்.

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கி பிரபலமான விஜய் சந்தர் இயக்கி உள்ளார்.