மோட்டார் சைக்கிளொன்று நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியதில் குறித்த  மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் எல்ல- வெள்ளவாயா பிரதான பாதையில் 14 மற்றும் 15 ஆகிய மைல்களுக்குக்கிடையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பதுளைப் பகுதியின் கட்டவளை என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.எம். திலினி நிமேசா என்ற 19 வயது யுவதியே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில். குறித்த  மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் ஆபத்தான நிலையில் வெள்ளவாயா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து குறித்து எல்ல பொலிஸார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதிக வேகமே இவ்விபத்திற்குக் காரணமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.